தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வறுமை நீங்கி வளம் பெறுவோம்

வறுமை நீங்கி வளம் பெறுவோம்

வறுமை நீங்கி வளம் பெறுவோம்


ADDED : ஜூலை 30, 2008 09:01 AM

Google News

ADDED : ஜூலை 30, 2008 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>மாதவன் போற்றும் அருட்சக்தியாம் திருமகள் என்னும் தேவியை வாழ்த்துவோம். தாமரை மலரில் வளரும் மணியாம் தேவியைப் போற்றி வணங்குவோம். அம்மா! வறுமைத்துயரெல்லாம் போதும். வேதனையும், வறுமையும் தீர உன் இணையடிகளைச் சரணடைகிறோம். பாற்கடலில் பிறந்தவளே! அமுதினைப் போன்றவளே! செந்தாமரை மலரில் அமர்ந்தவளே! நான்கு கரங்களிலும் செல்வத்தினை ஏந்தியிருப்பவளே! வேல் போன்ற விழிகளைக் கொண்டவளே! சிவந்த திருமேனியை உடையவளே! உனக்கு என் நமஸ்காரம். நாராயணரின் மார்பில் வீற்றிருப்பவளே! மங்கலத் தோரணத்திலும், பசுமாட்டுக் கொட்டிலிலும், சுடர்மணி மாடத்துவிளக்கிலும், வெற்றி வீரர்களின் தோள்களிலும், உழைப்பாளர் ஈடுபடும் நல்ல தொழில்களிலும் அருளாட்சி செய்கின்றாய். பொன்னிலும், நவமணிகளிலும், நறுமணம் மிக்க மலர்களிலும், சந்தனத்திலும், விளக்கிலும், கன்னியர் கொஞ்சும் சிரிப்பினிலும், செழுமையான காட்டிலும், நறும் பொழிலும், பசுமையான வயல்வெளியிலும் வாழ்ந்திடும் <BR>திருமகளே! உன்னை புகழ்ந்து பாடி பாதமலரைச் சரண்புகுந்து நல்ல வாழ்வினைப் பெறுவோம். வறுமை நீங்கி வளம் பெறுவோம்.</P>



Trending





      Dinamalar
      Follow us